ரஜினியின் 74 ஆவது பிறந்தநாளையொட்டி கூலி திரைப்பட கிளிம்ஸ் காணொளி!

top-news

நேற்று ரஜினி தன்னுடைய 74 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு ரசிகர்களும் திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து கூறினார்கள்.

அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி திரைப்படக் குழுவும் கிப்ட் கொடுத்திருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.அப்படத்திலிருந்து கிலிம்ஸ் காணொளி ஒன்று நேற்று வெளியானது. சிக்கிடு வைப் என்ற பெயரில் வெளியான அந்த மியூசிக் இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதில் டி ராஜேந்தர் குரலில் செம ஆட்டம் போட்டிருந்தார் ரஜினி. கடந்த சில படங்களில் அவர் ஆடவில்லை ஹீரோயின் தான் ஆடுகிறார் என்ற விமர்சனம் இருந்தது.அதை எல்லாம் பொய்யாக்கி எல்லோரையும் ஆட வைத்து விட்டார் சூப்பர் ஸ்டார். அதேபோல் டி ராஜேந்தரின் குரலை நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இதை இப்போது கொண்டாடி வரும் ரசிகர்கள்  டி ஆர், ரஜினி காம்பினேஷன் இப்போது பட்டையை கிளப்பியுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *