எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'டாப் குக்கு டூப் குக்கு' சீசன் 2

top-news

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'டாப் குக்கு டூப் குக்கு' சீசன் 2

'Top cooku Doop cooku' Season 2 raises expectations

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது அதற்கு போட்டியாக 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், இதில் வெங்கடேஷ் பட் நடுவராக கலந்து கொண்டார். விஜய் டிவியில் இருந்து வெளியேறிய இயக்குனர் - தயாரிப்பாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் பணியாற்றி வந்தனர். முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இதன் இரண்டாவது சீசன் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. எனவே டாப் குக்கு டூப் குக்குக்கு முடிவடைந்து விட்டதா? என நெட்டிசன்கள் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் கடந்த வாரம் 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியின் 2 -ஆவது சீசன் துவங்க உள்ளது உறுதியான நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 9 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்களாம்.

நடிகர், எழுத்தாளர் - வேலா ராமமூர்த்தி, எதிர்நீச்சல் 2 சீரியல் நடிகை - பார்வதி, பிரபல பாடகர் - உன்னிகிருஷ்ணன், குணசித்திர நடிகர் - எம் எஸ் கர், மருமகள் சீரியல் நடிகை - கேப்ரியல்லா, பிரபல நடிகை - இனியா, பிஜிபோஸ் பிரபலமும், நடிகையுமான சாக்ஷி அகர்வால், சூப்பர் சிங்கர் பிரபலம் - சாம் விஷால், சீரியல் நடிகர் - நந்தன், ஆகியோரின் பெயர் வெளியாகி உள்ளது. அதே நேரம் இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பற்றி எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *