GISBH செயல்பாடுகளை ஒழிக்க வேண்டும்! - பேராக் சுல்தான் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

பேராக், அக் 9: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, மாநிலத்தில் உள்ள குளோபல் இக்வான் சர்வீசஸ் பெர்ஹாட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இஸ்லாமிய போதனைகள் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து விலகியதால், அதன் செயல்பாடுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக பேரா மந்திரி பெசார் சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.

பேராக் இஸ்லாமிய மதத் துறை (JAIPk) தயாரித்த அறிக்கையை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, சுல்தானின் அழைப்பு வந்ததாக சாரணி கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

பேராக்கில் மாறுபட்ட போதனைகளைக் கடைப்பிடிப்பதாக சந்தேகிக்கப்படும் பல குழுக்களையும் அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தாங்கள் இவ்விவகாரத்தில்  அமைதியாக இருக்க மாட்டோம் என்றும்,  இந்த மாறுபட்ட போதனைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கைக்காக வரவிருக்கும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய கவுன்சில் (எம்கேஐ) கூட்டத்தில் இந்த விவகாரம் மேலும் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *