தொலைபேசி வழியாக நூதன மோசடி! RM 748,000 ரிங்கிட் இழந்த மாது!
- Shan Siva
- 17 Nov, 2026
கோலாலம்பூர், நவ 17: மருத்துவமனையில்
இருந்து பேசுவதாகக் கூறி தொலைபேசி வழியாக நடத்தப்பட்ட மோசடியில் 54 வயது பெண் ஒருவர் 7 லட்சத்து 48 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.
பத்து பஹாட்
பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்ட மோசடி நபர்கள், அவரது பெயரைப் பயன்படுத்தி வேறொருவர்
காப்பீட்டுத் தொகை கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அந்த
அழைப்பு புக்கிட் அமான் காவல்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்ட மற்றொரு நபருக்கு
மாற்றப்பட்டுள்ளது.
விசாரணைக்காக
வங்கிக் கணக்கு அட்டை தேவைப்படுவதாகக் கூறி, அந்தப் பெண்ணிடம் இருந்து ATM அட்டையையும் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் அவரது
வங்கிக் கணக்கிலிருந்து 6 லட்சத்து 73 ஆயிரம் ரிங்கிட் மாற்றப்பட்டுள்ளது. மேலும் 75 ஆயிரம் ரிங்கிட்டையும் மூன்று வங்கிக்
கணக்குகளில் அவர் செலுத்தியுள்ளார்.
இந்த மோசடி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

