சிவகார்த்திகேயனை கடுப்பாக்கிய பரிதாபங்கள் கோபி-சுதாகர்!

top-news
FREE WEBSITE AD

அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கியுள்ள 'ஓ காட் பியூட்டிஃபுல்' திரைப்படத்தில், கோபி மற்றும் சுதாகர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விடிவி கணேஷ், விஜி சந்திரசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி, சுபத்ரா ராபர்ட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜே சி ஜோ இசையமைத்துள்ள இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், இருவரும் சார்லி சாப்ளின் கெட்டப்பில் இடம் பெற்றிருந்தனர்..

ஓ காட் பியூட்டிஃபுல்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோவில், கோபி, சுதாகருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். புரோமோவில், சுதாகர் வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டதாகச் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார்.

சிவகார்த்திகேயன் வாசிக்கச் சொல்ல, சுதாகர் சரியாக வாசிக்காமல் போக, சிவகார்த்திகேயன் கோபித்துக்கொண்டு செல்வதுபோலவும், பின்னர் கோபி அவரைச் சமாதானம் செய்து அனுப்புவதுபோலவும் காட்சிகள் நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளன. 'வேணும் மச்சா பீஸ்' இந்தப் பாடலைச் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். 'வேணும் மச்சா பீஸ்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோரின் பயணம், பலருக்கும் ஒரு ஊக்கமளிக்கும் கதையாகும். யூடியூபில் இருந்து சினிமாவுக்கு வரும் அவர்களின் முயற்சி, நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 'ஓ காட் பியூட்டிஃபுல்' திரைப்படம், அவர்களின் கனவை நனவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *