மன்னித்துவிடுங்கள் அது தவறுதான்! இனி இந்திய சமூக விவகாரங்களை நேரடியாக நானே கவனிப்பேன் – பிரதமர் அன்வார் உறுதி

top-news

சிரம்பான், ஜூலை 30: மலேசிய இந்திய சமூகத்தைப் பாதிக்கும் அனைத்து முக்கிய விவகாரங்களையும் இனிமேல் தாமே நேரடியாக மேற்பார்வையிட்டு கவனிப்பதாக பிரதமர் Anwar Ibrahim அறிவித்துள்ளார்.

இந்திய சமூகத்தினரிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளும் குறைகளும் தொடர்ந்து வந்ததையடுத்து இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதுவரை இந்தப் பொறுப்பை மனிதவள அமைச்சர் R. Ramanan கவனித்து வந்தாலும், இனி மித்ரா (MITRA) மட்டுமல்லாமல், இந்திய சமூகத்தைச் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் தாமே நேரடியாகக் கண்காணிக்கப்போவதாக அன்வார் கூறினார்.

அதேவேளையில், மித்ரா அமைப்பின் கீழ் அரசால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் பொறுப்புகளை அமைச்சர் ராமணன் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அவர் விளக்கினார்.

இந்த நடவடிக்கையின் மூலம் Tekun Nasional, Amanah Ikhtiar Malaysia, கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் இந்திய சமூகத்தின் பொருளாதார முன்னேற்றம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளின் ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், ஒற்றுமை அரசை சில தரப்பினரின் குற்றச்சாட்டுகள் அல்லது கருத்துக்களின் அடிப்படையில் அல்லாமல், அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு இந்திய சமூகத்தினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, கடந்த காலத்தில் கோயில்கள் தொடர்பாக பேசும்போது “சட்டவிரோத கோயில்கள்” (kuil haram) என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக அன்வார் மன்னிப்பு கோரினார்.

நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஒரு பழமையான கோயில்கூட இடிக்கப்படவில்லை. விதிமுறைகள் உள்ளன. ஒரு கோயிலை ‘சட்டவிரோதம்’ என்று கூறியிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது தொழில்நுட்ப ரீதியிலான தவறு. அந்தத் தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *