உலகப் புகழ்பெற்ற காலநிலை ஆய்வாளர் ஷீன்பாம் மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபரானார்!

top-news

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா பதவியேற்றார். இவரது பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி கில் பைடன் பங்கேற்றார்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. மெக்சிகோவின் ஆளும் மொரீனா கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளரான கிளாடியா ஷீன்பாம், அசைக்க முடியாத முன்னிலையுடன் கிட்டத்தட்ட 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 3 மாதங்களுக்குப் பிறகு, மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றார்.

பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் மற்றும் பிரேசில் அதிபர் ஜாலா டா சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.ஷீன்பாம், உலகப் புகழ்பெற்ற காலநிலை ஆய்வாளர். அவருக்கு 2007ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2018ல் அவர் தேர்தலில் வெற்றி பெற்று மெக்ஸியோ நகரின் முதல் பெண் மேயராக பதவி வகித்து வந்தார். 2000 ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றினார்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *