உலக டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2025: நூருல் இஸ்ஸா இஸ்ஸதி அஸ்ரி முதல் சுற்றில் தோல்வி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 25-

மலேசியாவின் பெண் சைக்கிள் ஓட்ட வீரர் நூருல் இஸ்ஸா இஸ்ஸதி அஸ்ரி, 2025 உலக டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் தனி ஸ்பிரிண்ட் நிகழ்ச்சியின் முதல் சுற்றில் தோல்வியடைந்து, போட்டியில் இருந்து வெளியேறினார். சிலி நாட்டின் வெலோட்ரோம் பெனலோலென் அரங்கில் நடந்த இந்தப் போட்டியில், அவர் உலக சாம்பியன் நியூசிலாந்தின் எல்லெஸ் ஆண்ட்ரூஸுக்கு எதிராக தோல்வியுற்றார்.

22 வயது கெடா பெண் வீராங்கனை நூருல் இஸ்ஸா,கடந்த ஆண்டும் இதே முதல் சுற்றில் தோல்வியடைந்தது போல இம்முறையும் அதே நிலையை மீண்டும் சந்தித்தார். கடந்த ஆண்டு அவர் ஜெர்மனியின் அலெஸா கேட்ரியோனா ப்ராப்ஸ்டருக்கு எதிராக தோற்றார். இருப்பினும், தகுதிச் சுற்றை வெற்றிகரமாக கடந்து முதல் சுற்றுக்கு முன்னேறியது அவரது நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

அதற்கு முன், தகுதிச் சுற்றில் நூருல் இஸ்ஸா 11.019 வினாடிகள் நேரத்தில் முடித்து. 34 போட்டியாளர்களில் 26ஆவது இடத்தைப் பெற்றார். இதன் மூலம் அவர் முதல் சுற்றுக்குத் தகுதி பெற்றார். ஆனால், இந்த நேரம் அவரது தேசிய சாதனையான 10.578 வினாடிகளை விட  நிறைய வித்தியாசம் உள்ளது.

இந்தத் தோல்வி, நூருல் இஸ்ஸாவின் முயற்சியில் மேம்பாடுகள் தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், அவரது இளம் வயதும். தொடர்ச்சியான முயற்சியும் எதிர்காலத்தில் சிறந்த சாதனைகளை எட்டும் என நம்பிக்கை அளிக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *