உலக சிறார் தடகள விளையாட்டுப் போட்டி!

top-news

(நாகேந்திரன் வேலாயுதம்)

சிரம்பான், பிப். 23-
உலக சிறார் தடகள விளையாட்டுப் போட்டி ஆறாம் ஆண்டாக இவ்வாண்டு இங்கு பண்டார் ஸ்ரீ செண்டாயான் ஐஆர்சி விளையாட்டு அரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது.ஐஆர்சி கிளப் மற்றும் மைலோ ஆதரவுடன் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 200 சிறார்கள் பங்கெடுத்தனர் என இப்போட்டியை ஏற்று நடத்தும் ஐஆர்சி விளையாட்டு பிரிவின் தலைமை பயிற்றுநரும், ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான செல்வி என்ற தமிழ்ச்செல்வி பெரியசாமி கூறினார்.

இப்போட்டி 6-7 வயது. 8-9 வயது மற்றும் 10-12 வயது என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.
மேலும் இப்போட்டியில் 40, 50, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் பிரிவுகளுக்கான தடகள ஓட்டப் போட்டியும் சிறப்பு அங்கமாக இடம்பெற்றது.நாட்டின் எதிர்கால தடகள விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் நோக்கத்திலும், இளம் விளையாட்டாளர்களை உருவாக்கும் நோக்கத்திலும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாக செல்வி குறிப்பிட்டார்.




பல்லின போட்டியாளர்கள் பங்கெடுத்த இப்போட்டியில், இன, மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு, இதன் மூலமாக சிறந்த மலேசிய விளையாட்டாளர்களால், இந்நாடு உலகளாவிய நிலையில் தடகள விளையாட்டு போட்டியில் சாதனை படைக்க முடியும் என்றும் செல்வி நம்பிக்கை தெரிவித்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் குழுவுக்கான வெற்றி கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.முன்னதாக இப்போட்டியை 6 வயதுக்குட்பட்ட சிறார் போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தனர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *