ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை விலகல்!

top-news

அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கான தகுதிச்சுற்று ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடரிலிருந்து 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கால்முட்டி மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்படும் அவர் அதிலிருந்து முழுமையாக மீளாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *