பொந்தியானில் கோர விபத்து! லாரி - மோட்டார்சைக்கிள் மோதி மூவர் பலி
- Shan Siva
- 08 Oct, 2026
கோலாலம்பூர், அக் 8: ஜொகூர், பொந்தியான் பகுதியில் உள்ள ஜலான் கம்போங் பாரிட் ஹாஜி
சிராஜ் (Jalan Kampung Parit Haji Siraj) என்னுமிடத்தில், இன்று காலை
மோட்டார் சைக்கிள் ஒன்று லாரியுடன் மோதியதில் 8 முதல் 18 வயதுக்குட்பட்ட
மூன்று உடன்பிறப்புகள் உயிரிழந்தனர்.
காலை சுமார் 7.20 மணியளவில் நடந்த இந்த விபத்தில், 18 வயதுடைய ஒருவரும், அவருடன் 11 மற்றும் 8 வயதுடைய அவரது இரு இளைய உடன்பிறப்புகளும் பயணித்த
ஹோண்டா மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டிருந்ததாக பொந்தியான் காவல் துறைத் தலைவர்
ஹஸ்ரத் ஹுசைன் மியோன் ஹுசைன் தெரிவித்தார்.
எதிர் திசையில்
வந்த லாரியுடன் மோதும் முன், அந்த மோட்டார்
சைக்கிள் ஜலான் பாரிட் ஹாஜி ஓமரில் (Jalan Parit Haji Omar) இருந்து காயு ஆரா பாஸோங் (Kayu Ara Pasong) நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
மோட்டார்
சைக்கிளை ஓட்டியவர் பலத்த காயமடைந்து, பொந்தியான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
69 வயதுடைய லாரி
ஓட்டுநரின் கைகள் மற்றும் இரு முழங்கால்களிலும் காயம் ஏற்பட்டதாகவும், அவர் சிகிச்சை பெற்றதாகவும் ஹஸ்ரத் கூறினார்.
இது தொடர்பாக விசாரணை
நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

