செனாய் - டேசாரு விரைவுச்சாலையில் கோர விபத்து! இருவர் பலி
- Shan Siva
- 16 Nov, 2026
ஜொகூர், செனாய் – டேசாரு விரைவுச்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில்
இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 1.49
மணியளவில், தேசாரு நோக்கிச் செல்லும்
விரைவுச்சாலையின் 52.5ஆவது
கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.
புரோட்டான் X70,
புரோட்டான் பெர்சோனா மற்றும் டொயோட்டா வாகனங்கள்
ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில்
புரோட்டான் X70 வாகனத்தில்
பயணம் செய்த 58 வயது
ஆணும், பெர்சோனா காரில்
பயணம் செய்த 26 வயது
பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் X70 காரில் பயணம் செய்த 51 மற்றும் 47 வயதுடைய இருவர் காயமடைந்தனர். டொயோட்டா வாகனத்தில் இருந்த ஆண் ஒருவர் காயமின்றி உயிர்
தப்பினார்.
வாகனங்களுக்குள்
சிக்கியிருந்த இருவரைத் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி
வெளியேற்றினர்.
காயமடைந்தவர்கள்
சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

