டீசல் எண்ணெய்யை கடத்தல் கும்பலுக்கு விற்கும் லோரி ஓட்டுனர்கள் செயல் முறியடிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, நவ.15-

பத்து காஜாவிலுள்ள சில லோரி ஓட்டுநர்கள் தங்களின் நிறுவன கனரக வாகனங்களுக்கான டீசல் எண்ணெய்யை கடத்தல் கும்பலுக்கு லிட்டருக்கு வெ.2.00க்கு விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.பத்து காஜா, ஜாலான் கோப்பெங் பத்து தீகாவில் மணலைச் சுரண்டும் செயலை முறியடிக்க மேற்கொண்ட ஒப்ஸ் திரிஸ் 3.0 வாயிலாக இந்த மோசடி நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கான அமைச்சின் பேரா மாநில இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

பொதுமக்கள் கொடுத்தத் தகவல் மற்றும் அமைச்சின் உளவுத் துறையினர் 2 வார காலமாக பத்து காஜா சுற்றுப் பகுதிகளில் மேற்கொண்ட உளவு நடவடிக்கையைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை காலை 7.30 மணிக்கு இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.நம்பகத்தன்மையற்ற இந்த லோரி ஓட்டுநர்கள் தங்களின் உள்ளூர் நிறுவன லோரிக்கான டீசல் எண்ணெய்யை வேலை செய்யும் இடத்திலுள்ள கும்பலுக்கு லிட்டருக்கு வெ.2.00 வீதம் விற்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. அந்த டீசல் தங்களின் சொந்த லோரியிலிருந்து பம்ப் மற்றும்  குழாயைக் கொண்டு கடத்தல் கும்பலின் லோரி தொட்டி மற்றும் லோரியின் மீதுள்ள கூடுதல் தொட்டியில் அனுப்பப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோ கமாலுடின் இஸ்மாயில் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *