வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் உச்ச கட்டத்தை அடையும்-மெட்மலேசியா!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, நவ. 9 -

கனத்த மழையை பொழியச் செய்யும் வடகிழக்கு பருவமழை, இம்மாத இறுதியில் உச்ச கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சபா சரவாக் உட்பட கிழக்குக் கரை மாநிலங்களைத் தவிர்த்து, மலேசிய- தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் கன மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு இலாகா (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.

இக்காலகட்டத்தில் மேல் கூறப்பட்டுள்ள மாநிலங்களிலும் பகுதிகளிலும், கூடுதலாக 20 முதல் 40 விழுக்காடு வரையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மெட்மலேசியா தலைமை இயக்குநர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் எச்சரித்துள்ளார். தீபகற்ப மலேசியாவைப் பொறுத்த வரையில், இம்மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரையிலும் சபா மற்றும் சரவாக்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரையில் இத்தகைய நிலை நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

"மழையின் அளவு 20 முதல் 40 விழுக்காடு வரையில் கூடுதலாக பெய்தாலும், அதனால் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் என்று கூறிவிட முடியாது. “ஆனால், உதாரணத்திற்கு, ஒரு பகுதியில் குறுகிய காலத்தில் அதாவது இரண்டு நாட்களுக்கு20 விழுக்காட்டுக்கும் அதிகமாக மழை பெய்தால்மட்டுமே பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும்" என்று, புத்ராஜெயாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடுகள் மீதான ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் முஹமட் ஹிஷாம் தெரிவித்தார்.

இதனிடையே, வானிலை தொடர்பிலான தங்கள் பகுதிகளின் நிலவரங்களை அறிந்து கொள்ள, மைசுவாச்சா (myCuaca) செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.வானிலை குறித்த தகவல்கள் உடனுக்குடன் அந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், பொதுமக்களும் இதன் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என்றும் இதுவரையில் சுமார் இரண்டு லட்சம் பேர் அச்செயலியை தங்களின் கைத்தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *