விமானங்களை வாங்குவது தொடர்பில் மலேசியாவிற்கு குவைத்திடமிருந்து சாதகமான பதில்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 8 -

எஃப்ஏ-18 ஹோர்னெட் போர் விமானங்களை வாங்குவது தொடர்பிலான மலேசியாவின் கோரிக்கைக்கு குவைத்திடமிருந்து சாதகமான பதில் வந்திருப்பதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

இந்த் கொள்முதல் இவ்விமானங்களின் விநியோக நாடான அமெரிக்காவின் அனுமதியை பொறுத்திருப்பதாகவும் தனது அனைத்து புதிய போர் விமானங்களையும் குவைத் பெற்ற பின்னரே அவற்றை கொள்முதல் செய்ய முடியும் என்றும் காலிட் தெரிவித்தார். “இந்த போர் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பிலான மலேசியாவின் கோரிக்கைக்கு குவைத் சாதகமான பதிலை அளித்திருக்கிறது.

எனினும் அவற்றை விநியோகிக்கும் நாட்டின் அங்கீகாரம் முதலில் கிடைக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். “இரண்டாவது, தாம் வாங்கியிருக்கும் அனைத்து ஹோர்னெட் போர் விமானங்களையும் குவைத் பெற்ற பின்னரே அதனிடமிருந்து மலேசியாவினால் சிலவற்றை கொள்முதல் செய்யவும் முடியும். “மலேசியாவின் கோரிக்கையை தாங்கள் எதிர்க்கவில்லை என்று குவைத் உத்தரவாதம் அளித்திருக்கிறது. அக்கொள்முதல் இந்த இரண்டு நிபந்தனைகளை மட்டும்தான் பொறுத்திருக்கிறது” என்று காலிட் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *