2025-ல் வளர்ச்சிக்கான மொத்த பொது முதலீடு RM 120 பில்லியனாக இருக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 18: 2025 ஆம் ஆண்டில் வளர்ச்சிக்கான மொத்த பொது முதலீடு RM120 பில்லியனாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க வளர்ச்சிக்கான ஒதுக்கீடுகள் தவிர, RM9 பில்லியன் மதிப்பிலான பொது-தனியார் கூட்டாண்மை (PFI) திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும், GLIC நிறுவனங்களின் நேரடி உள்நாட்டு முதலீடுகள் 25 பில்லியன் ரிங்கிட் அளவும் செயல்படுத்தப்படும் என்றும் அன்வார் கூறினார்.

முன்னதாக, அரசு-இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (GLICs) மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (GLCs) தங்கள் வெளிநாட்டு முதலீடுகளைக் குறைத்து, உள்நாட்டு முதலீடுகளை அதிகரிக்குமாறு அன்வார் வலியுறுத்தினார்.

நிதி அமைச்சு தலைமையிலான GEAR-uP திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் RM120 பில்லியன் முதலீடு செய்ய ஆறு GLICகள் உறுதி பூண்டுள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *