உடனடியாகச் சிறையில் அடையுங்கள்! பி.பிரபாகரன்
- Shan Siva
- 21 Oct, 2026
கோலாலம்பூர், அக் 21: வழிபாட்டுத் தலங்களை அவமதிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், நியூ பந்தாய் விரைவுச்சாலைக்கு அருகிலுள்ள கோயில் ஒன்றில் மதச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.
மத வழிபாட்டுத் தலங்களை அவமதிப்போருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிணை வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தண்டனைச் சட்டத்தின் 295ஆவது பிரிவின்படி, மதத்தை அவமதிக்கும் நோக்கில் வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில், மதத்தை அவமதிக்கும் குற்றங்களுக்கு அபராதத்தை நீக்கிவிட்டு சிறைத்தண்டனையை மட்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் பிரபாகரன் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

