அம்னோவின் நேர்மை மீது சந்தேகம்! -சனுசி நோர்
- Shan Siva
- 14 Sep, 2026
கோலாலம்பூர், செப் 14: திரெங்கானுவில் முன்கூட்டியே தேர்தல் (snap election) நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமது ஹசான் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, மலாய் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் அம்னோவின் நேர்மை குறித்து பாஸ் (PAS) கட்சியின் தேர்தல் இயக்குனர் சனுசி நோர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஜொகூர் அல்லது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பாஸ் கட்சிக்குத் தனது இடங்கள் எதையும் விட்டுக்கொடுக்காத அம்னோவைப் போலல்லாமல், மலாய் ஒற்றுமைக்கான செயல்திட்டத்தில் இஸ்லாமியக் கட்சியான பாஸ்-இன் நேர்மையைச் சோதிக்க வேண்டிய அவசியமில்லை என்று சனுசி கூறினார்.
இதுவரை அம்னோவின் "நேர்மை" என்பது வாக்கு மாற்றத்தை உறுதி செய்வதற்கும், தற்போதுள்ள இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மட்டுமே பயன்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல்களில் அம்னோவின் எந்த இடங்கள் பாஸ் கட்சிக்கு வழங்கப்பட்டன? அல்லது மலாக்காவில் அம்னோவின் எந்த இடங்கள் வழங்கப்படவுள்ளன? என அவர் கேள்வி எழுப்பினார்.
இதுவரை அம்னோவின் நேர்மை என்பது அவர்கள் வசம் உள்ள இடங்களைப் பாதுகாப்பதில் மட்டுமே இருந்துள்ளது. அதன் பிறகுதான், பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள இடங்கள் போன்ற, தங்களுக்கு இன்னும் கிடைக்காத இடங்களுக்காக அவர்கள் போராடுகிறார்கள் என்று சனுசி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலாய் ஒற்றுமை விவகாரத்தில் பாஸ் கட்சியின் நேர்மையை நிரூபிப்பதற்காக, அக்கட்சி தலைமையிலான திரெங்கானுவில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முகமட் ஹசான் அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும்,திரங்கானுவில் இடப் பங்கீடு தொடர்பான ஒரு சூத்திரத்தில் அம்னோவும் பாஸ் கட்சியும் உடன்பட முடிந்தால், அடுத்த பொதுத் தேர்தலுக்கும் அதே அணுகுமுறையைப் பின்பற்றலாம் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

