பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம்! - கூட்டணி கட்சிகளுக்கு சனூசி ஆலோசனை

top-news

கோலாலம்பூர், அக் 21: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பாஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூட்டணியின் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியின் பிறை சின்னம் ஏற்கெனவே வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமானது என்பதால், அதைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட விளக்கம் கோரும் அறிவிப்புக்கு பெரிக்காத்தான் நேஷனல் அளித்த பதில், அதன் பதிவைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்குப் போதுமானதாக இல்லை எனக் கூறி, சங்கங்களின் பதிவிலாகா கூட்டணியின் பதிவை ரத்து செய்துள்ளது.

இதற்கிடையே, பதிவுத்துறையின் இடைநீக்க உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, மலாக்கா தேர்தலில் பாஸ் கட்சி பாரிசான் நேஷனலின் தராசுச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக அம்னோ தெரிவித்திருந்தது.

நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் இணைந்து செயல்படுவது தொடர்பாக அம்னோவும் பாஸ் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த ஒப்பந்தம் கொள்கையளவில் எட்டப்பட்டுள்ளதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் முன்னதாகத் தெரிவித்திருந்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *