மலேசிய இளம் போவ்லிங் வீராங்கனை கத்தாரில் தங்கம் வென்றார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 29-

மலேசியாவின் இளம் போவ்லிங் வீராங்கனை குர்ரத்து அய்ன் இஸ்தார், கத்தாரின் டோஹாவில் நடைபெற்ற 24ஆவது ஆசிய இளையோர் போவ்லிங் போட்டியில் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவர், சீனாவின் லி யிருவை ஒரு பின் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றார்.

குர்ரத்து அய்ன் ஆறு ஆட்டங்களில் அமைதியான, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மொத்தம் 1,239 பின்களை வீழ்த்தினார். இது, 1,238 பின்களைப் பெற்ற லி யிருவை விட ஒரு பின் மட்டுமே அதிகம். இந்த இறுக்கமான போட்டியில், தைவானின் ஹோ யி கிங் 1,205 பின்களுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

மலேசியாவின் மற்ற இரு பிரதிநிதிகளும் பாராட்டத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடேலியா நூர் ஷாஸலீ 1,197 பின்களுடன் நான்காவது இடத்தையும், பால்கிஸ் நூர்தினி கைருல் 1.190 பின்களுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றி. மலேசிய இளையோர் போவ்லிங் அணியின் திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தியது.

குர்ரத்து அய்னின் இந்தச் சாதனை. மலேசியாவிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்தது. அவரது அமைதியான மனநிலையும், சீரான ஆட்டமும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *