வரும் 3 ஆண்டுகள் கோலாலம்பூரில் வெள்ளத்தைத் தாங்கும் திறனை மேம்படுத்த மேலும் நான்கு திட்டங்கள்!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், அக் 24:

திடீர் வெள்ளத்தை சமாளிக்க நகரின் 14 வெள்ள தணிப்பு திட்டங்களில் இரண்டு முடிவடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.மேலும் 4 திட்டங்கள் செயல்படுத்தும் நிலையில் உள்ளதாகவும், 8 பணிகள் டெண்டர் பகுப்பாய்வில் இருப்பதாகவும் பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஏழு வெள்ளத் தணிப்பு திட்டங்களை முடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் 2025 முதல் 2027 வரை, கோலாலம்பூரில் வெள்ளத்தைத் தாங்கும் திறனை மேம்படுத்த மேலும் நான்கு திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்த நீண்ட கால முயற்சிகள் கோலாலம்பூரில் வெள்ளத்தின் தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கும் தணிப்பதற்கும் நோக்கமாக உள்ளன. நாட்டின் முக்கிய நுழைவாயிலாக மட்டுமல்லாமல் தலைநகராகவும் பிராந்திய பொருளாதார மையமாகவும் கோலாலம்பூர் செயல்படுவதோடு, குறிப்பாக ஆசியான் உச்சி மாநாட்டிற்கு மலேசியா தலைமை வகிக்க உள்ளது என்று அவர் கூறினார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *