நெகிரியில் ம.இ.கா-வுக்கு நான்கு தொகுதிகள்! ஜாஹிட் அறிவிப்பு
- Shan Siva
- 16 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 16: வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் கூட்டணியில் ம சீ ச-க்கு 7 தொகுதிகளும், ம இ கா-வுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
அம்னோ தலைவருமான அவர், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை மதிப்பீடு செய்த பின்னரே இந்த தொகுதி பங்கீட்டு முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் அம்னோ தலைமையகத்தில், பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



