மனநல பாதிப்பில் இளைஞர்கள்! நாடாளுமன்றத்தில் விவாதம்!
- Shan Siva
- 22 Oct, 2026
கோலாலம்பூர், அக். 22: கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிய அழுத்தம், உறவுச் சிக்கல்கள், சமூக ஊடகங்களின் தாக்கம், பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்டவை மலேசிய இளைஞர்களின் மனநலத்தைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமது
நடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய சுகாதார மற்றும் நோயுற்ற தன்மை ஆய்வின்
(NHMS) முடிவுகளின்படி,
16 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களில்
4.6 விழுக்காட்டினர்,
அதாவது சுமார் 10 இலட்சம் பேர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக, 16
முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 7.9 விழுக்காட்டினரும், 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 7.6 விழுக்காட்டினரும்
மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்ற வயதினருடன் ஒப்பிடுகையில் இளம் வயதினரிடையே மனச்சோர்வு அதிகமாகக் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

