பதில் சொல்ல வேண்டியிருக்கும்; வரம்பு மீறாதீர்கள்! - ஃபாமி ஃபாட்சில் எச்சரிக்கை
- Shan Siva
- 21 Jul, 2026
ஜெம்போல், ஜுலை 21: மலாய் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை பக்காத்தான் ஹரப்பான் தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபட்சில் நிராகரித்துள்ளார். மேலும், அந்த சமூகத்தின் நலன்களுக்காகப் போராடுவதற்கு மலாய்-முஸ்லிம் தலைவர்களுக்கு பக்காத்தான் ஹரப்பானில் பஞ்சமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நெகிரி செம்பிலான் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆகியவற்றின் ஒத்துழைப்பு, மலாய் மக்களின் உணர்வுகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பக்கத்தான் ஹரப்பானுக்கு உணர்த்துவதற்காகவே செய்யப்பட்டது என்ற கைரி ஜமாலுதீனின் கருத்துக்குப் பதிலளித்த ஃபஹ்மி, அந்த சமூகத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டவர் கைரி மட்டுமல்ல என்று கூறினார்.
ஒரு மலாய்க்காரனாக, எழுப்பப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தாம் நன்கு அறிந்தவனாகவும், அவற்றின் மீது உணர்வுப்பூர்வமாக இருப்பவனாகவும் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தனது மறைந்த தாத்தாவும் பாட்டியும் அம்னோ உறுப்பினர்களாக இருந்தனர் என்று கூறினார். தனது மறைந்த பாட்டி, மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களின் நலனுக்காகப் போராடிய ஒரு தீவிர அம்னோ ஆதரவாளராக இருந்தார் என்று ஃபெல்டா பாலோங் 2-ல் நடைபெற்ற ஸியாரா காஸிஹ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அம்னோவிற்குத் திரும்பியதைத் தொடர்ந்து, அரசியல் ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், தனது ஆதரவுத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் விரும்பியதாலேயே, மலாய் மற்றும் இஸ்லாமியப் பிரச்சினைகள் மீது கைரி மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது என்று ஃபஹ்மி கூறினார்.
சமூகத்தின் மற்றும் மதத்தின் நலன்களைப் பாதுகாக்கும் மலாய்-முஸ்லிம் தலைவர்கள் பக்காத்தான் ஹரப்பான் இல்லை என்ற கருத்தையும் ஃபஹ்மி நிராகரித்தார்.
அன்வார் இப்ராஹிம் ஒரு மலாய்-முஸ்லிம் இல்லையா? முகமது சாபு ஒரு மலாய்-முஸ்லிம் இல்லையா? சூல்கெஃப்லி அஹ்மத் ஒரு மலாய்-முஸ்லிம் இல்லையா? அமிருதீன் ஷாரி மற்றும் அமினுதீன் ஹாரூன் ஆகியோர் மலாய்-முஸ்லிம்கள் இல்லையா?”
பொய்களைப் பரப்புவதை நிறுத்துவோம். நினைவில் கொள்ளுங்கள், முஸ்லிம்களாகிய நாம் பொய் பேசினால், மறுமையில் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். வரம்பு மீறாதீர்கள் என்று கைரிக்கு அவர் அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

