மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்!
- Muthu Kumar
- 28 Sep, 2025
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகிவரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் அறிவியல் புனைகதைகள் சார்ந்த படமாக உருவாகியுள்ளது. காதல், எமோஷன் மற்றும் பொழுதுபோக்கு போன்ற கதையாகத்தில் உருவாகியுள்ளது.
இப்படமானது ஆரம்பத்தில் கடந்த 2025 செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகவும் என படக்குழு அறிவித்தது.பின் சில காரணங்களால் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பின் மீண்டும் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியாகவும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்த தேதியில்தான் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படமும் வெளியாகிறது. இந்நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாத காரணத்தால், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை பெற படக்குழு சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் கேட்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகத்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறதாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



