48 ஆயிரத்து 950 கோடி ரிங்கிட் முதலீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல்!

top-news

கோலாலம்பூர், டிச. 5-

2023ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் தொழில்துறை, சேவை மற்றும் முதன்மை துறைகளில் மொத்தம் 48 ஆயிரத்து 950 கோடி ரிங்கிட் முதலீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் 26 ஆயிரத்து 290 கோடி ரிங்கிட் அல்லது 53.7 விழுக்காடு அந்நிய முதலீடு என்றும் 22 ஆயிரத்து 650 கோடி ரிங்கிட் உள்ளூர் முதலீடு என்றும் முதலீடு,வாணிபம், தொழில்துறை அமைச்சின் துணை அமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்தார்.

"பினாங்கு 6,500 கோடி ரிங்கிட், கெடா 5,400 கோடி ரிங்கிட், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் 4,300 கோடி ரிங்கிட், ஜொகூர் 3,800 கோடி ரிங்கிட், சிலாங்கூர் 2900 கோடி ரிங்கி ஆகும்", என்று அவர் கூறினார்.

நேற்று மக்களவையில் இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு தொகை, மாநில அடிப்படையிலான முதலீட்டு தொகை குறித்து தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் சியாங் ஜென் எழுப்பிய கேள்விக்கு லியூ சின் தோங் அவ்வாறு பதிலளித்தார்.

பொருளாதார நடவடிக்கைகள், வர்த்தக வாய்ப்புகள், உயர் மதிப்புள்ள வேலை வாய்ப்புகள் உட்பட நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் தரமான முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை முதலீடு, வாணிபம், தொழில்துறை அமைச்சு, மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் வழி அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *