ஆசியான் திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வ கார்களாக EV கார்களைப் பயன்படுத்த அரசு திட்டம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, அக் 29:

ஆசியான் திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வ கார்களாக EV கார்களைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக அடுத்த ஆண்டு நாட்டில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்தார்.

தற்போதுள்ள 2,000க்கும் மேற்பட்ட EV சார்ஜிங் நிலையங்கள், முக்கியமாக நகர்ப்புற மையங்களில் குவிந்துள்ளன. அடுத்த ஆண்டு நகரங்களில் நடைபெறும் ASEAN கூட்டங்களுக்கு EV களை அதிகாரப்பூர்வ வாகனங்களாகப் பயன்படுத்துவதற்குப் போதுமானது என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு ஆசியான் தலைவராக மலேசியா விளங்குவதால்,  ஆசியான் கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிச் செல்ல அதிகாரப்பூர்வ கார்களாக EVகளைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *