இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்!
- Shan Siva
- 02 Apr, 2026
ஜகார்த்தா, ஏப் 2: Indonesia வடக்கு
மாலுக்கா கடற்பகுதியில் இன்று அதிகாலை
7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டது. இது Ternate தீவுக்கு
அருகே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், சில
மணி நேரங்களில் அது திரும்பப் பெறப்பட்டது.
நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வுகள் (aftershocks) 5 ரிக்டர் அளவுவரை பதிவாகியுள்ளன. West Halmahera பகுதியில் 0.3 மீட்டர் உயரத்திலும், Bitung பகுதியில் 0.2 மீட்டர் உயரத்திலும் அலைகள்
பதிவாகியுள்ளன.
Manado பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில்
ஒருவர் உயிரிழந்துள்ளார்; மேலும் ஒருவருக்கு கால் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த நபர் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி
உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ternate மற்றும் Tidore போன்ற
பகுதிகளில் உள்ள உள்ளூர் நிர்வாகங்களுக்கு மக்களை பாதுகாப்பாக வெளியேற்றத் தயாராக
இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 6.48 மணிக்கு, 35 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையம் Ternate-இலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



