பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டயை கிளப்பிய "முஞ்யா" திரைப்படம் ஓடிடி யில் வெளியீடு!

top-news

கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான 'முஞ்யா' திரைப்படத்தில் சத்யராஜ், ஷர்வரி வாக், அபய் வர்மா, மோனா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சென்னை எக்ஸ்பிரஸ், ராதேஷ்யாம் படங்களை தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் நடிகர் சத்யராஜிக்கு இது 3வது படமாகும்.

அதித்யா சர்போத் தர் இயக்கிய இப்படம் உலகளவில் ரூ.132 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மடாக் பிலிம்ஸ் பேனரின் கீழ் அமர் கௌஷிக் மற்றும் தினேஷ் விஜன் தயாரித்த இப்படம், வெறும் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதால், இந்த ஆண்டின் மிக அதிக வசூல் செய்த ஹிந்தி படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சச்சின்-ஜிகர் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள், படத்தின் வெற்றிக்கு முக்கிய கடமையாற்றியுள்ளது.

பழைய கதைகளை புதிய கோணத்தில் பார்ப்பது போன்ற உணர்வை இந்தப் படம் தருகிறது. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு படமாக 'முஞ்யா' அமைந்துள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்தனர். முஞ்யா எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில், அவர்களின் காத்திருப்புக்கு இப்போது முடிவு கட்டப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியான போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'முஞ்யா' தற்போது ஓடிடியிலும் அதே வெற்றியை திரும்பப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *