இன்னுமா மதத்தை வைத்து அரசியல் செய்கிறீர்கள்? உள்துறை அமைச்சர் வருத்தம்!
- THINAGAREN SANGGAREN
- 27 Jul, 2026
ஜூலை 27,
நாடு சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னும் மதத்தை வைத்து அரசியல் செய்கீறீர்களே என பாஸ் கட்சியைப் பக்காத்தான் கூட்டணியின் பொதுச் செயலாளர் Datuk Seri Saifuddin Nasution Ismail சாடினார். நீங்கள் ஒரு சமூகத்திற்கானத் தலைவர்களாக உங்களை அடையாளம் காட்டிக்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அனைத்து சமூகத்திற்குமான அரசாங்கத்தை நிர்வகிப்பீர்கள் என எப்படி நம்புவது என உள்துறை அமைச்சரான Datuk Seri Saifuddin Nasution Ismail கேள்வி எழுப்பினார்.
இன மத அடிப்படையில் அவர்களுக்கான சமய நம்பிக்கையை மட்டுமே நாம் அளவிட முடியும். வறுமையை மத அடிப்படையில் எப்படி ஒழிப்பது? மத அடிப்படையில் வாழ்வாதாரத்தை எப்படி உயர்த்துவது? மத அடிப்படையில் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது? மத அடிப்படையில் முதலீடுகளை எப்படி ஈர்ப்பது என பாஸ் கட்சிக்கு Datuk Seri Saifuddin Nasution Ismail சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். நாட்டைப் பல ஆண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளும் மத அரசியலைக் கையிலெடுக்காதீர்கள். அது நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என Datuk Seri Saifuddin Nasution Ismail எச்சரிக்கை விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

