உலகக்கோப்பை தகுதிச்சுற்று – பாகிஸ்தானிடம் மலேசியா 5-3 தோல்வி

top-news

கோலாலம்பூர், மார்ச் 3-

2026 ஆம் ஆண்டுக்கான ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச்சுற்றில், குழு ‘பி’யில் தங்களது நிலையை வலுப்படுத்தும் மலேசிய ஆண்கள் ஹாக்கி அணியின் நம்பிக்கை, பாகிஸ்தானிடம் 5-3 எனத் தோல்வியடைந்ததன் மூலம் பாதிக்கப்பட்டது.

இந்த தோல்வியால், அரையிறுதிக்கு முன்னேறவும் 2026 உலகக்கோப்பை இடத்தைப் பெறவும், புதன்கிழமை இரவு சீனாவை எதிர்த்து மலேசியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் முஹாஜிர் அப்து ரவூப் கோல் அடித்து மலேசியாவை முன்னிலை பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடங்களில், 14ஆவது நிமிடத்தில் முகமது அகிமுல்லா அனுவார் எசூக் பெனால்டி கார்னரை வெற்றிகரமாக மாற்றி இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

ஆரம்பத்தில் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மலேசியா, பின்னர் பாகிஸ்தானின் தாக்குதல்களை தடுக்க முடியாமல் போனது. தொடர்ந்து அடிக்கப்பட்ட கோல்களால் ஆட்டத்தின் நிலை மாறி, இறுதியில் 5-3 என்ற கணக்கில் மலேசியா தோல்வியைச் சந்தித்தது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *