பனாமாவை வீழ்த்திய குரோஷியா; முதல் வெற்றியை பதிவு செய்தது

top-news

டொரொண்டோ, ஜூன் 24 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் எல்’ பிரிவு ஆட்டத்தில் குரோஷியா அணி பனாமாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தது.

கனடாவின் டொரொண்டோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியில் பல வாய்ப்புகள் உருவானபோதும் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் கோலின்றி சமநிலையில் நீடித்தது.

இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தின் 54-ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் அனுபவம் மிக்க முன்னணி வீரர் ஆன்டே புடிமிர் கோல் அடித்து அணியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். அந்த கோல் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

பின்னர் பனாமா சமநிலை கோலை தேடி பல முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் குரோஷியாவின் உறுதியான தற்காப்பு ஆட்டத்தை உடைக்க முடியவில்லை.

இறுதியில் ஆன்டே புடிமிரின் கோலே வெற்றியை தீர்மானித்ததால் குரோஷியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *