சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய ஹூ பாங் ரோன் – லாய் பெய் ஜிங் ஜோடி
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
கோலாலம்பூர், செப். 4 –
சீன மாஸ்டர்ஸ் 2026 பேட்மிண்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் தொழில்முறை ஜோடியான ஹூ பாங் ரோன் – லாய் பெய் ஜிங், அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
சீனாவின் ஷென்சென் நகரில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 43-ஆவது இடத்தில் உள்ள ஹூ பாங் ரோன் – லாய் பெய் ஜிங் ஜோடி, தைவானின் லியூ குவாங் ஹெங் – சூ யின் ஹுய் ஜோடியை எதிர்கொண்டது.
36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இரு ஜோடிகளும் கடுமையாக போராடின. தைவான் ஜோடி தொடர்ந்து நெருக்கடி கொடுத்தபோதிலும், மலேசிய ஜோடி முக்கியமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு 24-22 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது.
இரண்டாவது செட்டில் முழு ஆதிக்கம் செலுத்திய மலேசிய ஜோடி, தாக்குதல் ஆட்டத்தின் மூலம் எதிரணியை திணறடித்தது. இறுதியில் அந்த செட்டை 21-5 என்ற கணக்கில் எளிதாக வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



