தேர்தல் வந்தால் மட்டும் மத அரசியலைக் கையெலுடுக்கும் சனூசி! பாப்பாராய்டு கண்டனம்!
- THINAGAREN SANGGAREN
- 27 Jul, 2026
ஜூலை 27,
தேர்தல் காலங்களில் மட்டும் இன மத வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் சனூசி போன்றவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Papparaidu வலியுறுத்தினார். ஒரு மாநிலத்தின் மெந்திரி பெசாராக இருக்கும் சனூசி இந்தியர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என Papparaidu தெரிவித்தார். தேர்தல் வந்தால் மட்டும் இவர்கள் போன்றவர்கள் இன மதங்களுக்கிடையில் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார்கள். அரசியல் ஆதாயத்திற்காக இன பாகுபாட்டு அரசியலைக் கையிலெடுக்கும் சனூசி போன்றவர்களுக்கு எதிராக ஆதரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட வேண்டும் என்றும் சனூசியின் பதவி, அரசியல் பலம் என்பனவற்றைப் பொருட்படுத்தாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Papparaidu வலியுறுத்தினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

