விருப்பத்திற்கு நாடாளுமன்றம் வராதீர்கள்! கடுப்பான சபாநாயகர்!
- THINAGAREN SANGGAREN
- 06 Nov, 2026
நவம்பர் 6,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைக்குத் தாமதமாக வருவதைத் தவிர்க்க வேண்டும் என சபாநயாகர் Tan Sri Johari Abdul வலியுறுத்தினார். மக்களவையை நேரத்துடன் தொடங்க வேண்டும் என்றால் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த நேரத்தில் மக்களவைக்குள் இருக்க வேண்டும், உங்கள் விருப்பத்திற்கு நாடாளுமன்றம் வர கூடாது என Tan Sri Johari Abdul தெரிவித்தார்.
கேள்விகளைக் கேட்கும் எதிர்க்கட்சியினர் அதற்கான பதில்கள் வழங்கப்படும் போது நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியம். காலையில் கேள்விக் கேட்கிறீர்கள். அதற்கு அமைச்சர்கள் மதியம் பதிலளிக்கிறார்கள் என்றால் மதியம் வரையில் காத்திருந்து பதிலைப் பெற்று அதன்பின்னர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறுங்கள் என Tan Sri Johari Abdul வலியுறுத்தினார். அதே போல அமைச்சர்களும் நாடாளுமன்றத்திற்கு முன்னமே வந்து கேள்விகளைப் பெற்று கொண்டு அமைச்சர் உரையிலேயே அதற்கான பதிலையும் வழங்க வேண்டும். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைக்குத தாமதமாக வருவதைத் தவிர்க்க வேண்டும் என நாடாளுமன்றச் சபாநாயகர் Tan Sri Johari Abdul வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

