மத்தியில் ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஸ் கட்சிக்குத் தகுதி இல்லை! - மகாதீர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 29: மத்தியில் ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஸ் கட்சிக்குத் தகுதி இல்லை என்று முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். பாஸ் கட்சி தனது புகழை மட்டுமே வைத்து கொண்டு தனியாக ஒரு போதும் ஓர் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று அவர் விமர்சித்துள்ளார்.

 

கிளந்தான், திரெங்கானு, கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாஸ் கட்சியால் வாக்குகளைப் பெற முடியும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், பாஸ் கட்சி 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களை வென்றது. ஆனால், அரசை வழிநடத்த அந்த எண்ணிக்கை மிகக் குறைவு என மகாதீர் சுட்டிக்காட்டினார்.

 

பாஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் பிற கட்சிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். ஒருவேளை அவர்கள் ஆட்சி அமைக்க நினைத்தால், இன்னும் குறைந்தது 80 தொகுதிகளாவது இருக்க வேண்டும். அதேபோல் நாடு முழுக்க தனது கட்டமைப்பை பாஸ் உருவாக்க வேண்டும். ஆனால், நட்டின் பல மாநிலங்களில் அக்கட்சிக்கான ஆதரவு அவ்வளவாக இல்லை என்று மகாதீர் தெரிவித்தார்!

 

மலாய் வாக்காளர்கள் மத்தியில் அம்னோவின் ஆதரவு குறைந்துவிட்டாலும், ஊழல் வழக்குகள் மற்றும் கட்சித் தாவல்கள் உட்பட பெர்சத்துவின் பிரச்சினைகள் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதில் பாஸ்  கட்சி சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்று மகாதீர் மேலும் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *