பாஸ் + அம்னோ! பொதுத் தேர்தல் வரையில் தொடரும்! – சனூசி!

top-news

நவம்பர் 18,

பாஸ் கட்சியும் அம்னோவும் இணைந்து அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணி அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தல் வரையும் நீடிக்க வேண்டும் என கெடா மெந்திரி பெசாரும் பெரிக்காத்தான் தேர்தல் குழு தலைவருமான Datuk Seri Sanusi Nor வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய 3 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிகமான வாக்காளர்களை நாம் ஈர்த்துள்ளதால் இந்த கூட்டணி தொடர்வதற்காகப் பாஸ் கட்சியும் அம்னோவும் முனைப்புக் காட்ட வேண்டும் என Datuk Seri Sanusi Nor கேட்டுக்கொண்டுள்ளார். 

கெடா மாநிலத்தில் பாரிசானுடன் சிறந்த ஒத்துழைப்பு இல்லாததையும் Datuk Seri Sanusi Nor சுட்டிக்காட்டினார். ஆனால் மக்கள் விரும்பும் ஒரு கூட்டணியாக நாம் இருந்தால் தேர்தலில் பெறும் வெற்றிகளைப் பகிர்ந்துக் கொள்ளலாம் என Datuk Seri Sanusi Nor தெரிவித்தார். சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் வேறுபாடுகள் உள்ளது. சட்டமன்றங்களில் கிடைத்திருக்கும் வெற்றி, நமக்கு நாடாளுமன்றத்திற்கும் கிடைக்க வேண்டும் என்றால் பாஸ் கட்சியும் அம்னோவும் இணைந்து, தேர்தலில் ஒரே கூட்டணியில் போட்டியிட வேண்டும் என Datuk Seri Sanusi Nor கேட்டுக்கொண்டார்..

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்