நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் வேட்பாளர் அம்னோவில் இருந்து வரலாம் – பாஸ்

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஜூலை 13-

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் அம்னோ உடனான ஒத்துழைப்பு உறுதி செய்யப்பட்டால், மந்திரி பெசார் வேட்பாளர் அம்னோவில் இருந்து வருவதை பாஸ் ஏற்கத் தயாராக உள்ளதாக பாஸ் கட்சி தலைவர் Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஸ் மற்றும் அம்னோ இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதன் முன்னேற்றம் மிகவும் நேர்மறையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடாத தொகுதிகளில் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலானிலும் இரு கட்சிகளுக்கிடையே ஒத்துழைப்பு உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அம்னோ ஆதிக்கம் கொண்ட கட்சி என்பதையும் பாஸ் ஏற்றுக்கொள்கிறது என அவர் தெரிவித்தார்.

அதனால், மாநிலத்தை வழிநடத்தும் மந்திரி பெசார் பதவி அம்னோவுக்குச் செல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரோயில் நடைபெற்ற பாஸ் நெகிரி செம்பிலான் இரவு விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது Abdul Hadi இதனை தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *