ஜொகூரில் தேசிய முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்க பாஸ் தியாகம் செய்தது – Abdul Hadi

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஜூலை 13-

ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடாத தொகுதிகளில், தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குமாறு தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதாக பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார்.

மலாய்-இஸ்லாம் தலைமை தொடர்ந்து மாநிலத்தை வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பாஸ் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாததால் ஏமாற்றமில்லை என்றும், பக்காத்தான்  ஹரப்பானைத் தோற்கடிப்பதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாஸ் போட்டியிடாத பகுதிகளில் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க உறுப்பினர்களை இயக்கியதாகவும், அதில் எம்சிஏ வேட்பாளர்களுக்கான ஆதரவும் அடங்கும் என்றும் அவர் விளக்கினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *