பாரிசான் & பெரிக்காத்தான் கூட்டணியை எதிர்க்க பக்காத்தான் தயாராக வேண்டும்! MAT SABU சூளுரை!
- THINAGAREN SANGGAREN
- 22 Nov, 2026
நவம்பர் 22,
பெரிக்காத்தானும் பாரிசானும் இணைந்து அமைத்திருக்கும் கூட்டணியைச் சாதாரணமாக வீழ்த்த முடியாது என்பதால் பக்காத்தான் வலுவான ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என பக்காத்தான் கூட்டணியின் அமானா கட்சியின் தலைவர் MAT SABU வலியுறுத்தினார். ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தானும் பாரிசானும் இணைந்து பெற்ற வெற்றிகள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதை மாட் சாபூ சுட்டிக்காட்டினார்.
அவர்களுடைய பலமும் பல்வீனமும் பக்காத்தானுக்குத் தெரியும். ஆனால் நாமும் அவர்களுக்கு இணையான பலத்துடன் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்நோக்க வேண்டும் என அமானா கட்சியின் தலைவர் MAT SABU கேட்டுக்கொண்டார். பக்காத்தானின் வேட்பாளர்கள் அடுத்த பொதுத் தேர்தல் வரையும் காத்திருக்காமல் மாவட்ட அளவில் மக்களின் நம்பிக்கையைப் பெற இப்போதே கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அமானா கட்சியின் தலைவர் MAT SABU வலியுறுத்தினார். அமானா கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் நம்முடைய கட்சி வெற்றிப் பெற வேண்டும். பக்காத்தானின் வெற்றியை அமானா உறுதிச் செய்ய வேண்டும் என MAT SABU வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

