போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வியட்னாமிய பெண்ணும் காதலனும்!
- Sangeetha K Loganathan
- 15 Nov, 2024
நவம்பர் 15,
ஜொகூர் குளுவாங் பகுதியில் தன் உள்ளூர் காதலனுடன் போதைப்பொருளை வணிகம் செய்து வந்த வியட்னாமியப் பெண் கைது செய்யப்பட்டு நிலையில் குளுவாங் Masjistret நீதிமன்றத்தில் தன் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
கடந்த நவம்பர் 3 இரவு குளுவாங்கில் உள்ள Taman Tasik Indah குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருளுடன் இருவரும் கைது செய்யப்பட்டனர். அபாயகரமானப் போதைப்பொருளான MDMA வகை போதைப்பொருளை விற்பனை செய்ததையும் அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
வியட்னாமிய பெண்ணுக்காக அவரின் மொழியில் எதிர்வரும் 26 நவம்பர் அவருக்கு எதிரானக் குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும் வாசிக்கபப்டும் என நீதிபதி விளக்கமளித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் குற்றத்தை மறுக்காமல் மீண்டும் ஒப்புக் கொண்டால், அதன் பின்னர் ஜனவரி 9 தண்டனையை உறுதிச் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki tempatan dan wanita Vietnam dihadapkan ke Mahkamah Majistret Kluang atas pertuduhan mengedar 1.47kg dadah jenis MDMA di Taman Tasik Indah. Sebutan semula kes ditetapkan pada 9 Januari 2025.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *