தலைநகரில் 472 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

செப்டம்பர் 14,

தேசிய குடிநுழைவு துறையினர் தலைநகர் Lebuh Pudu பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 472 வெளிநாட்டினர்களைக் கைது செய்தனர். காலை 11 மணிக்கு தேசிய குடிநுழைவு துறை, கோலாலம்பூர் நகரம், உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கை செலவின அமைச்சு ஆகிய அரசு துறை அதிகாரிகள் இணைந்து இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Lebuh Pudu பகுதியில் உள்ள அனைத்து வணிக வளாகத்திலும் இருந்த 2500 வெளிநாட்டினர்களை சோதனையிட்டதில் 472 வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்தது தெரிய வந்ததாக குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 439 ஆண்கள் 33 பெண்கள் என்றும், அனைவரும் 18 முதல்  62 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது. அனைவரும் BANGLADESH, MYANMAR, INDONESIA, PHILIPPINES, NEPAL, PAKISTAN, CHINA ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *