வரலாறு படைத்த பேர்லி-தினா
- Tamil Malar (Reporter)
- 17 Nov, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ. 17-
மலேசிய பெண்கள் இரட்டையர் ஜோடியான பேர்லி டான்-எம். தினா, ஜப்பானின் குமமோட்டோ மாஸ்டர்ஸ் தொடரில் முதல் மலேசிய வெற்றியாளர்களாக வரலாறு படைத்துள்ளனர். இது அவர்களது பி.டபிள்யூ.எப் உலக சுற்றுப்பயணத்தில் மூன்றாவது சாம்பியன் பட்டமாகும்.
உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள பேர்லி-தினா ஜோடி, ஜப்பானிய ஜோடியான ரின் இவானகா-கீ நகனிஷியை (உலக தரவரிசை 7ஆவது இடம்) வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி குமமோட்டோ மாகாண ஜிம்னாசியத்தில் நடைபெற்றது. முதல் செட்டில் 22-20 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டில் 21-19 என்ற கணக்கிலும் மலேசிய ஜோடி வெற்றி பெற்றது. இரு செட்களிலும் அபாரமான திருப்புமுனை ஏற்படுத்தி, ஜப்பானிய ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடிய எதிரணியை வீழ்த்தினர்.
இந்த வெற்றி, கடந்த மாதம் பின்லாந்தில் நடைபெற்ற ஆர்க்டிக் ஓபன் இறுதிப்போட்டியில் ஜப்பானிய ஜோடியை வீழ்த்தியதன் மூலம், இதுவரை பேர்லி-தினா ஜோடி இவானகா-நகனிஷி ஜோடிக்கு எதிரான தங்களது சாதனைப் பதிவை 6-2 ஆக விரிவுபடுத்தியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



