பேர்லி-தினா மகளிர் உலக தரவரிசையில் முதலிடம்

top-news

செய்தி-வெற்றி மைந்தன்

மலேசியாவின் மகளிர் இரட்டையர் அணியான பேர்லி டான்-எம். தினா, இந்த ஆண்டு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் சீனாவின் லியு ஷெங் ஷு-டான் நிங் ஜோடியை பின்னுக்குத் தள்ளி இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

-தினா, 104,860 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர். இதற்கு மாறாக, ஷெங் ஷு-டான் நிங் ஜோடி 103,150 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டனர். சீன ஜோடி, பிரெஞ்சு ஓபன், ஹைலோ ஓபன் போட்டிகளில் பங்கேற்காததால் இந்த மாற்றம் ஏற்பட்டது.

உலக சுற்றுப்பயண தரவரிசை, இந்த ஆண்டு டிசம்பர் 17 முதல் 21 வரை ஹாங்சோவில் நடைபெறவுள்ள உலக சுற்றுப்பயண இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முதல் எட்டு இரட்டையர் ஜோடிகளை தீர்மானிக்கப் பயன்படுகிறது. பேர்லி-தினா இந்த தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருப்பது, அவர்களது இறுதிப்போட்டி தகுதிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *