இந்தோனேசியா மாஸ்டர்ஸ் : பெர்லி-தினா பட்டத்தை வென்றனர்

top-news

கோலாலம்பூர், ஜன. 26-

மலேசியாவின் முன்னணி பெண்கள் இரட்டையர் ஜோடி, பேர்லி டான் – எம். தினா, 2026 ஆம் ஆண்டிற்கான தங்களின் முதல் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோரா செனாயான் அரங்கில் நடைபெற்ற இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், அவர்கள் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தனர்.

BWF சூப்பர் 500 தரவரிசை கொண்ட இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறவிருந்த நிலையில், ஜப்பான் ஜோடி அரிசா இகராஷி – மியூ தகஹாஷி திடீரென விலகியது. காயம் காரணமாக அவர்கள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எந்த ஆட்டமும் விளையாடாமல் பேர்லி–திநா ஜோடி ‘வாக் ஓவர்’ முறையில் சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்த வெற்றி, கடந்த ஆண்டு இதே போட்டியில் சந்தித்த ஏமாற்றத்தை மறக்கச் செய்ததாக மலேசிய பேட்மிண்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது மலேசிய பெண்கள் இரட்டையர் ஜோடியாக பேர்லி–திநா பெயர் பெற்றுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *