மாணவர்களுக்காக சிறப்பு ரஹ்மா ப்ரீபெய்ட்!

top-news
FREE WEBSITE AD


 புத்ராஜெயா, ஜூலை 16: பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுப் பயிற்சி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு ரஹ்மா ப்ரீபெய்ட் இணையத் தொகுப்பை தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இன்று அறிவித்தார்.

புதிய மற்றும் தற்போதைய மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த சிறப்புத் தொகுப்பு ஆகஸ்ட் 16 முதல் கிடைக்கும்.

RM30 விலையில், குறைந்தபட்சம் 30GB டேட்டாவை 180 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் இது வழங்குகிறது.

இந்த தொகுப்பு CelcomDigi, Maxis, U Mobile, TM Tech மற்றும் YTL Communications (YES), ஆகொய நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தானாக முன்வந்து கட்டணத்தை குறைத்துள்ளதால், இந்த திட்டத்திற்கு அரசு நிதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த ரஹ்மா தொகுப்பின் மூலம் மாணவர்கள் முழுமையாகப் பயனடைய வேண்டுடும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்று அவர் கூறினார்.

பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் மாணவர் அட்டைகளை அவர்கள் தேர்ந்தெடுத்த தொலைத்தொடர்பு வழங்குநரிடம் சமர்ப்பித்து இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம் என்று ஃபஹ்மி மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *