GISB – மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு கல்வித் திட்டம்! - கல்வி அமைச்சர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 23: குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸுடன் இணைக்கப்பட்ட சமூக நல இல்லங்களில் இருந்து மீட்கப்பட்ட 402 குழந்தைகளில் பெரும்பாலானோர் அக்டோபர் முதல் கல்வி அமைச்சின் சிறப்புக் கல்வித் திட்டத்திற்கு  உட்படுத்தப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் தெரிவித்தார். இந்த முயற்சி குழந்தைகளை தேசியக் கல்வி முறையில் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அமைப்பில் நுழைந்தவுடன் அவர்கள் பள்ளியை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதே இந்தச் சிறப்புத் திட்டம் என்று அவர் கூறினார்.

இப்போதைக்கு, மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணித திறன்களின் மதிப்பீடுகள் மற்றும் உளவியல் தொடர்பாக போதனைகள் இருக்கும் என்றும்,  இது கல்வி அமைச்சின் ஆலோசகர்களால் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *