பள்ளிக் கழிப்பறைக்கு லஞ்சம் கேட்ட 2 அரசு ஊழியர்கள் கைது! – SPRM

top-news

நவம்பர் 15,

பள்ளியில் கட்டப்படும் கழிப்பறைக்கானக் குத்தகைக்கு ஒப்பந்தக்காரரிடமிருந்து  லஞ்சம் பெற்ற 2 அரசு ஊழியர்களை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்தததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிப்பறைக்கானத் தொகையிலிருந்து 30% தொகையை லஞ்சமாகக் கேட்டதாகவும் சம்மந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் RM 130,000 பணத்தை ரொக்கமாக வழங்கியதாகவும் ஆதாரத்தின் அடிப்படையில் 50 வயதுக்குற்பட்ட இரு மாவட்ட அதிகாரிகளைக் கைது செய்ததாகவும் கோத்தா கினாபாலு நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட இருவரையும் நவம்பர் 21 வரையில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்தபோது RM 90,000 ரொக்கமும் 2 சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்துள்ளது.

Dua penjawat awam Sabah ditahan SPRM atas dakwaan menerima rasuah RM130,000 daripada kontraktor projek tandas sekolah. SPRM merampas RM90,000 tunai dan dua kenderaan mewah. Kedua-dua individu direman enam hari oleh mahkamah untuk siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *