விமான நிலைய பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, ஆக. 12-

கோத்தா பாருவில், விமான நிலையங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசூதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை உள்துறை அமைச்சு (KDN) அல்லது போக்குவரத்து அமைச்சு அமைச்சரவையில் சமர்ப்பிக்கலாம் என அவர் கூறினார். விமான நிலையங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, பாதுகாப்பு தொடர்பான அனைத்து நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, பணியாளர்களுக்கான பயிற்சி, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தளவாட ஏற்பாடுகள் ஆகியவை திட்டத்தில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்படும்.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் விமான நிலையப் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக சைபுதீன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, விமான நிலையங்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் அனைத்து தொடர்புடைய ஒழுங்குமுறை நிறுவனங்களும் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *