தலைமை கணக்காய்வாளர் நியமன முறையை வலுப்படுத்த சட்ட திருத்தம் தேவை – சியாரெட்சான் ஜோஹான்
- Surendran Sumdraraj
- 04 Sep, 2026
கோலாலம்பூர், செப். 4 –
தலைமை கணக்காய்வாளர் நியமன நடைமுறையை மேலும் வலுப்படுத்தவும், அந்த நிறுவனத்தில் அரசியல் தலையீட்டைத் தவிர்க்கவும் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் கணக்காய்வுச் சட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டிஏபி தேசிய துணைத் தலைவரும் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினருமான சியாரெட்சான் ஜோஹான் வலியுறுத்தியுள்ளார்.
முக்கியமான பொது நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்கு, நேர்மையான ஒருவரை பதவியில் நியமிப்பது மட்டும் போதாது என்றும், அதற்கான சட்ட மற்றும் அமைப்புசார் பாதுகாப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தலைமை கணக்காய்வாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கான நியமன செயல்முறை தெளிவானதாகவும், கடுமையான கண்காணிப்புடன் கூடியதாகவும் இருக்க வேண்டும் என சியாரெட்சான் தெரிவித்தார்.
மேலும், ஒருவரின் தனிப்பட்ட நேர்மை அல்லது நற்பண்பை மட்டும் நம்பி ஒரு முக்கிய நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



